வார்னர் ஓய்வை தொடர்ந்து தொடக்க வீரராக விளையாட ஸ்டீவ் ஸ்மித் விருப்பம்
- 3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார்.
- டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன்.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். ஏற்கனவே அவர் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்துவிட்டார்.
3 வடிவிலான போட்டிகளும் வார்னர் மிக சிறந்த அதிரடி ஆட்டக்காரர் ஆவார். அவரது இடத்தை நிரப்புவது என்பது மிகவும் சவாலானதே.
37 வயதான வார்னர் சர்வதேச போட்டிகளில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். 49 சதமும், 94 அரைசதமும் அடித்துள்ளார். தனது 14 ஆண்டுகள் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்துள்ளார்.
இந்நிலையில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு தொடக்க வீரராக விளையாட விருப்பத்துடன் இருப்பதாக மற்றொரு முண்ணனி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஸ்டீவ் சுமித் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
டெஸ்ட் போட்டியில் நான் தொடக்க வீரராக விளையாட மகிழ்ச்சியுடன் உள்ளேன். நிச்சயமாக தொடக்க வீரராக களம் இறங்குவதில் ஆர்வத்துடன் இருக்கிறேன். தேர்வு குழு என்னிடம் இதுபற்றி பேசுவார்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஏற்கனவே கேமரூன் கிரீன், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் பேன்கிராப்ட், மேட் ரென்ஷா ஆகியோரும் தொடக்க வீரருக்கான போட்டியில் உள்ளார். அவர்களுடன் ஸ்டீவ் சுமித் தும் தற்போது இணைந்து உள்ளார்.
அதே நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் கம்மின்ஸ் தொடக்க வீரராக ஸ்டீவ் சுமித் விளையாடுவதை விரும்ப வில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.