தமிழ்நாடு

அரசு மருத்துவமனைகளுக்கு புதிதாக 1,021 டாக்டர்கள் - கலந்தாய்வு தேதி அறிவிப்பு

Published On 2024-02-01 06:52 GMT   |   Update On 2024-02-01 06:52 GMT
  • அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
  • தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை.

சென்னை:

சென்னை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு வசதிகளுடன் மாணவர்களுக்கான தங்கும் விடுதி கட்டிடம் மற்றும் அரசு பல் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் விடுதி கட்டிடம் ஆகியவற்றிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார். மொத்தம் ரூ.197.14 கோடி மதிப்பில் நவீன கட்டிடங்கள் கட்டப்பட உள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

அரசு மருத்துவமனைகளில் காலியாக டாக்டர்கள் பணியிடங்களை நிரப்ப மருத்துவ தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாக 1021 மருத்துவர்கள் 20 மாவட்டங்களில் நியமிக்கப்படுகிறார்கள்.

டாக்டர் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு 3-ந்தேதி நடைபெறுகிறது. 4-ந்தேதி பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது. மகளிருக்கு சலுகை விலையில் ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது எந்த நோய் பரவலும் இல்லை. டெங்கு பாதிப்பு இந்த ஆண்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 15 வருடங்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. மழை, வெள்ளம் பாதிப்பு இருந்த போதும்கூட தொற்று நோய் பரவவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News