தமிழ்நாடு
கடமலைக்குண்டு பகுதியில் வெறிநாய் கடித்து 15 பேர் காயம்
- காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள ஆலந்தளிர் மற்றும் குமணன் தொழு கிராமத்தில் வெறிநாய் கடித்து, பெண்கள், சிறுவர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு கடமலைக்குண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடமலைக்குண்டு பகுதியில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டி உள்ளனர்.
மேலும் தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை இரண்டு நாய்கள் கடித்ததில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.