தமிழ்நாடு

சென்னையில் குற்றங்களை தடுக்க ஒரு வாரத்தில் பெண் குற்றவாளிகள் உள்பட 19 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2023-12-14 10:55 GMT   |   Update On 2023-12-14 10:55 GMT
  • போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

சென்னை:

சென்னை நகரில் குற்றச் சம்பவங்களை தடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவுப்படி போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வழிப்பறி, கஞ்சா விற்பனை, பண மோசடி, ரேசன் அரிசி கடத்தல்,மதுபாட்டில் விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட வில்லிவாக்கத்தை சேர்ந்த லதா (53), அடையாறை சேர்ந்த மெர்சிதீபிகா, துரைப்பாக்கத்தை சேர்ந்த ஆண்ட்ரூஸ், தரமணி மிதுன்சக்கரவர்த்தி, திருவொற்றியூர் அகில் அகமது உள்ளிட்ட மொத்தம் 19 பேர் குண்டர்சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இதற்கான உத்தரவை போலீஸ்கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பிறப்பித்து உள்ளார். இந்த ஆண்டில் மொத்தம் 667 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டம் மற்றும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கட்டப்பஞ்சா யத்து, மிரட்டி பணம்பறித்தல், போதை பொருட்கள் விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க ப்படும் என்று போலீசார் எச்சரித்து உள்ளனர்.

Tags:    

Similar News