செய்திகள்

வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை

Published On 2016-06-29 09:39 GMT   |   Update On 2016-06-29 09:39 GMT
பேரறிவாளன் சிறுநீரக தொற்று நோய் சிகிச்சைக்காக வேலூர் ஜெயிலில் இருந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

வேலூர், ஜூன். 29–

ராஜீவ்காந்தி கொலை கைதியான பேரறிவாளன் வேலூர் ஜெயிலில் அடைக் கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக தொற்று நோய் இருந்தது. இதற்காக அவர் வேலூரில் சிகிச்சை பெற் றார்.

பின்னர் சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு ஆபரே‌ஷன் நடந்தது. தொடர்ந்து அவர் வேலூர் ஜெயிலுக்கு கொண்டு வரப் பட்டார். அவர் அங்கு மருந்து சாப்பிட்டு வருகிறார்.

அவர் மூட்டு வலியாலும் அவதிப்பட்டு வருகிறார். இதற்காகவும், சிறுநீரக தொற்று காரணமாகவும் அவருக்கு மாதந்தோறும் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று சிகிச் சைக்காக அவர் வேலூர் ஜெயிலில் இருந்து டி.எஸ்.பி. பன்னீர் செல்வம் தலை மையில் பலத்த பாதுகாப் புடன் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பேரறிவா ளனுக்கு தேவைப்படும் மூட்டு வலி சிகிச்சைக்கு ஏற்ற வசதிகள் அடுக்கம்பாறை ஆஸ்பத்திரியில் இல்லை. எனவே அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.

பின்னர் அவர் பாதுகாப் புடன் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். சிறைத்துறை அனுமதி கிடைத்ததும் பேரறிவாளன் சென்னை அரசு ஆஸ்பத்தி ரிக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார் என்று தெரிகிறது.

Similar News