செய்திகள்

திண்டுக்கல் மாவட்டத்தில் 10 கிராமங்களில் ஜல்லிக்கட்டு

Published On 2017-01-25 04:39 GMT   |   Update On 2017-01-25 04:39 GMT
திண்டுக்கல் மாவட்டத்தில் 10 கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்தது. ஜல்லிக்கட்டு நடத்த பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் 5 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதை நிறுத்தி விட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுக்கான தடை நீங்கியதையடுத்து மாவட்டத்தில் வழக்கமாக நடைபெறும் கிராமங்களான கொசவபட்டி, பில்லமநாயக்கன்பட்டி, தவசிமடை, வெள்ளோடு, சொரிபாறைப்பட்டி, நத்தமாடிப்பட்டி, புகையிலைப்பட்டி, நெய்காரபட்டி, மறவபட்டி, குட்டத்து ஆவரம்பட்டி ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

இதில் கொசவபட்டியில் வருகிற 10-ந் தேதியும், புகையிலைப்பட்டியில் 15-ந் தேதியும், பில்லமநாயக்கன்பட்டியில் 22-ந் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடந்த கிராமக்கமிட்டியினர் தற்போதே ஏற்பாடுகளை தொடங்கி விடனர். கிராமங்களில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமலை அடிவாரம் உள்ளிட்ட இடங்களில் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்க பயிற்சி செய்து வருகின்றனர்.

Similar News