செய்திகள்

மூன்றாம் பாலினத்தவருக்கு அடிப்படை வசதிகள்

Published On 2017-02-01 02:01 GMT   |   Update On 2017-02-01 02:01 GMT
மூன்றாம் பாலினத்தவருக்கு அடிப்படை வசதிகள் செய்வது குறித்து சர்வதேச அளவில் ஆய்வு செய்ய வக்கீலை நியமிக்க ஐக்கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:

சென்னை செம்பியத்தை சேர்ந்தவர் தேவராஜன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘மூன்றாம் பாலினத்தவருக்கு திரையரங்கு, உணவகம் உள்ளிட்ட பொது இடங்களில் தனியாக கழிவறை வசதிகள் எதுவும் இல்லாததால், அவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே, இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், சர்வதேச அளவில் மூன்றாம் பாலினத்தவருக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளது? இதற்காக சர்வதேச அளவில் ஏதாவது விதிமுறைகள் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யவேண்டியது உள்ளது. எனவே, ஐகோர்ட்டுக்கு உதவும் நபராக வக்கீல் ஆர்.தேவபிரசாத் என்பவரை நியமிக்கிறோம். அவர் இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும். இந்த வழக்கு விசாரணையை வருகிற ஏப்ரல் 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று கூறியுள்ளனர்.

Similar News