செய்திகள்

திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் கடம்பூர் ராஜு

Published On 2017-02-01 07:54 GMT   |   Update On 2017-02-01 07:55 GMT
தியாகி திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று திருப்பூர் குமரனுக்கு சென்னி மலையில் மணிமண்டபம் அமைக்கப்படுமா என்று தென்னரசு (அ.தி.மு.க.) கேள்வி எழுப்பினார். அதற்கு செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியதாவது:-

திருப்பூர் ரெயில் நிலையம் எதிரில் தியாகி திருப்பூர் குமரனுக்கு நினைவகம் அமைக்கப்பட்டு 1991-ம் ஆண்டு திறக்கப்பட்டது. அவரது சிலையும் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது.

அக்டோபர் 4-ந்தேதி திருப்பூர் குமரன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்- அமைச்சர் உத்தவிட்டதின் பேரில் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு தியாகிகளுக்கு புரட்சி தலைவி அம்மா மணிமண்டபம் அமைக்கவும் திருவுருவ சிலை, நினைவு இல்லங்கள் போன்ற பணிக்காக 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சாதனை படைத்தார்.

எனவே உறுப்பினரின் கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்படும்.

Similar News