செய்திகள்
பொங்கல் விழாவில் பென்னிகுக் பேத்தி டயானாஜீப் மற்றும் உறவினர்கள்

பென்னி குக் பேத்தி கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு

Published On 2018-01-15 07:57 GMT   |   Update On 2018-01-15 07:57 GMT
போடி அருகே பிறந்த நாளையொட்டி பென்னி குக் பேத்தி டயானாஜீப் கிராம மக்களுடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தார்.

கம்பம்:

முல்லை பெரியாறு அணையை கட்டியவர் இங்கிலாந்து பொறியாளர் பென்னிகுக். இவரால்தான் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 2 போக சாகுபடி செய்து செழிப்பாக உள்ளது என்று கருதி பென்னிகுக்கை இந்த பகுதி மக்கள் தெய்வமாக கருதி வருகிறார்கள்.

எனவே பென்னிகுக் பிறந்த நாளான ஜனவரி 15-ந் தேதியை கம்பம் பள்ளத்தாக்கு பகுதி மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.

அதன்படி தமிழர்களின் பண்டிகையான இன்று மாட்டு பொங்கலையொட்டி கால்நடைகளை குளிப்பாட்டி கரும்பு, பழங்கள் வழங்கினர். அதோடு பென்னிகுக் பிறந்த நாளையும் சிறப்பாக கொண்டாடினர்.

இந்த ஆண்டு பென்னிகுக் பேத்தி டயானாஜீப் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிரதிநிதிகள் பெரியாறு அணையை பார்வையிட வந்திருந்தனர். அவர்களும் இன்று பாலார்பட்டி, உப்பார்பட்டி கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைத்து வழிபட்டார். பென்னி குக் பேத்திக்கும் அவரது உறவினர்களுக்கும் கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். #tamilnews


Tags:    

Similar News