செய்திகள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மனைவி மரணம்

Published On 2019-04-04 12:54 IST   |   Update On 2019-04-04 12:54:00 IST
பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி உடல்நலக்குறைவால் காலமானார்.
பட்டுக்கோட்டை:

பிரபல திரைப்பட பாடலாசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். ஏராளமான திரைப்படங்களுக்கு பாடல்கள் எழுதி உள்ள இவர் ‘மக்கள் கவிஞர்’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்.

இவரது சொந்த ஊர் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு கிராமம். இவரது மனைவி கவுரவம்மாள்(வயது 80) உடல்நலக்குறைவால் கடந்த 6 மாதங்களாக வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் அவர் மரணம் அடைந்தார்.

அவரது உடல் தகனம் இன்று(வியாழக்கிழமை) மாலை நடக்கிறது. இவர்களது ஒரே மகனான குமாரவேலு, செய்தி மக்கள் தொடர்பு துறையில் கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

Similar News