செய்திகள்
சென்னிமலையில் கிராம மக்கள் மோதலால் கோவில் கும்பாபிஷேகம் நின்றது
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பழைய சிலைதான் வைக்க வேண்டும்... இல்லை புதிய சிலைதான் வேண்டும்... என கிராம மக்களின் மோதலால் கோவில் கும்பாபிஷேகம் நின்றது.
சென்னிமலை:
ஈரோடு மாவட்டம் சென்னிமலை- ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது பால தொழுவு ஊராட்சி இப்பகுதியில் வெங்கமேடு செல்லும் வழியில் மிகவும் பழமையான கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலாகும்.
கோவில் சேதமடைந்து விட்டதால் இதை கடந்த ஒரு வருடமாக புதுப்பிக்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதமாக கும்பாபிஷேகம் நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் கோவிலில் சிலை வைப்பது தொடர்பாக பொதுமக்களில் இரு தரப்பினரிடையே பிரச்சனை ஏற்பட்டது. பொதுமக்களில் ஒரு தரப்பினர் கோவிலில் பல வருடங்களாக தரிசனம் செய்துவந்த பழைய சிலையே வைக்கவேண்டும் என்றனர். ஆனால், மற்றொரு தரப்பினர் புதிய சிலை வைக்க வேண்டும் என்றனர்.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெருந்துறை தாசில்தார் துரைசாமி முன்னிலையில் பெருந்துறையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது இரு தரப்பினரையும் சமரசம் செய்தனர்.
இதில் பழைய சிலை வைப்பதற்கு உடன்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. ஆனால் இதற்கிடையில் ஒரு தரப்பினர் அத்துமீறி கோவிலில் புதிய சிலையை வைத்தனர். இதனால் அங்கு மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது. போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இந்நிலையில் வருவாய்த்துறையினர், அறநிலையத்துறை, போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். உடன்பாட்டை மீறி அங்கு வைக்கப்பட்ட புதிய சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டனர். ஆனால், அதை அகற்ற மறுத்தனர்.
இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழல் உருவானதால் அதிகாரிகளின் உத்தரவின்படி கும்பாபிஷேகத்தை தற்போது நிறுத்தவும் மற்றொரு நாளில் நடத்த முடிவு செய்து ஒத்திவைத்தனர். கும்பாபிஷேகம் நிறுத்தப்பட்டதால் சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.