செய்திகள்
காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்த வாழைகள்

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்- 100க்கும் மேற்பட்ட வாழைகள் நாசம்

Published On 2020-01-09 05:29 GMT   |   Update On 2020-01-09 05:29 GMT
களக்காடு அருகே விளைநிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் பயிர் செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன.
களக்காடு:

களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி மலையடிவார பகுதிகளில் உலா வருவது வழக்கம்.

இந்நிலையில் களக்காடு தலையணை மலையடிவார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. அப்பகுதியில் ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அதிகாரி அசோக் கென்னடிக்கு சொந்தமான விளைநிலங்களில் புகுந்த காட்டுப்பன்றிகள் அங்கு பயிர் செய்யப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்தன.

இவைகள் ஏத்தன் ரகத்தை சேர்ந்த வாழைகள் ஆகும். குலை தள்ளும் நிலையில் வாழைகளை பன்றிகள் நாசம் செய்துள்ளதால் பெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது. இது குறித்து தகவலறிந்ததும் களக்காடு வனசரகர் புகழேந்தி மற்றும் வனத்துறையினர் காட்டுப்பன்றிகள் நாசம் செய்த வாழைகளை பார்வையிட்டனர்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. எனவே வனவிலங்குகள் பட்டியலில் இருந்து பன்றிகளை நீக்கம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.




Tags:    

Similar News