செய்திகள்
காவல் ஆய்வாளர் ஸ்ரீதர்

சாத்தான்குளம் வழக்கு- காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மருத்துவமனையில் அனுமதி

Published On 2020-07-23 14:35 IST   |   Update On 2020-07-23 14:35:00 IST
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீதருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை:

சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில், காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் இரண்டு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து, அவர்கள் மதுரையில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான முருகனின் ஜாமின் மனுவை மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Similar News