செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி

Published On 2020-08-19 13:51 GMT   |   Update On 2020-08-19 13:51 GMT
காஷ்மீரில் உயிரிழந்த எல்லை பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகேயுள்ள புள்ளவராயன்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் திருமூர்த்தி (வயது 44). 173வது படைப்பிரிவில் ஹவில்தாராக பணிபுரிந்து வந்த இவர் கடந்த ஜூலை 26ம் தேதி அன்று இந்திய எல்லையில் வழக்கமான ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கி குண்டு வெடித்ததில் படுகாயமடைந்து மருத்துமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் ஜூலை 31ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

உயிரிழந்த திருமூர்த்தியின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
Tags:    

Similar News