தமிழ்நாடு

ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இரவில் பூக்கும் அபூர்வ மலர்

Published On 2024-07-22 04:45 GMT   |   Update On 2024-07-22 04:46 GMT
  • அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
  • வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.

அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.

இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.

இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.

தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.

Tags:    

Similar News