தமிழ்நாடு

திண்டிவனம் அருகே தண்டவாளத்தில் மரம் விழுந்தது- சிக்னல் கோளாறால் ரெயில்கள் தாமதம்

Published On 2023-09-24 06:45 GMT   |   Update On 2023-09-24 06:45 GMT
  • மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • 8 விரைவு ரெயில்கள் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது.

திண்டிவனம்:

சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு திண்டிவனம், விழுப்புரம் வழியாக ரெயில்கள் சென்று வருகின்றன.

இரவு திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை பெய்து வந்தது. இதையடுத்து திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சென்னை நோக்கி சென்ற ரெயில் மீதும், தண்டவாளத்திலும் அருகே இருந்த மரம் விழுந்தது.

இதனால் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்திவிட்டார். மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மரம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மரம் விழுந்ததால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது. பின்னர் சிக்னல் கோளாறு சரி செய்யப்பட்டது. இதனால் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரெயில்களும், வட மாவட்டத்தில் இருந்து வந்த கம்பன் ,பாண்டியன் முத்துநகர், கன்னியாகுமரி , போன்ற 8 விரைவு ரெயில்களும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக காலதாமதமாக சென்னை நோக்கி சென்றது. இதனால் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags:    

Similar News