தமிழ்நாடு

மாயத்தேவர்

அ.தி.மு.க.வின் முதல் எம்.பி. மாயத்தேவர் மரணம்

Published On 2022-08-10 03:51 GMT   |   Update On 2022-08-10 03:51 GMT
  • தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கினார்.
  • திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக மாயத்தேவர் களம் இறங்கினார்.

சின்னாளப்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் வசித்து வந்தவர் முன்னாள் எம்.பி. மாயத்தேவர் (வயது 88). வயது மூப்பு காரணமாக இவர், வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாரடைப்பால் மாயத்தேவர் இறந்து விட்டார். அவரது உடலுக்கு, பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

மாயத்தேவரின் சொந்த ஊர், மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள டி.உச்சப்பட்டி என்ற கிராமம் ஆகும். கடந்த 1934-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந்தேதி, பெரியகருப்பத்தேவர்-பெருமாயி தம்பதிக்கு மகனாக பிறந்தார் மாயத்தேவர். இவருக்கு, சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு வெங்கடேசன், செந்தில் ஆகிய 2 மகன்களும், சுமதி என்ற மகளும் உண்டு.

தி.மு.க.வில் இருந்து விலகிய எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.வை தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில், 1973-ம் ஆண்டில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. அந்த தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில் அ.தி.மு.க. போட்டியிட்டது.

திண்டுக்கல் பாராளுமன்ற வேட்பாளராக மாயத்தேவர் களம் இறங்கினார். முதன் முதலாக இரட்டை இலை சின்னத்தில் அவர் போட்டியிட்டார். அந்த தேர்தலில் மாயத்தேவர் அமோக வெற்றி பெற்று வாகை சூடினார். இந்திய பாராளுமன்றத்துக்கு அ.தி.மு.க. சார்பில், முதல் எம்.பி.யாக அவர் அடியெடுத்து வைத்தார்.

Tags:    

Similar News