தமிழ்நாடு

அகில இந்திய பீச் வாலிபால் போட்டி: கோவா அணி சாம்பியன்

Published On 2024-03-12 05:52 GMT   |   Update On 2024-03-12 05:52 GMT
  • புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.
  • பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

சென்னை:

மெரினா பீச் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இந்தியன் பீச் வாலிபால் (கடற்கரை கைப்பந்து) புரோ டூர் போட்டி சென்னை நீலாங்கரையில் 3 நாட்கள் நடந்தது.

ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் கோவா அணி (ராம்-நிதின்) 21-18, 17-21, 15-9 என்ற செட் கணக்கில் மெரினா பீச் கிளப் அணியை (ராபின்-பரத்) வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றது. பெண்கள் பிரிவில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு விடுதி அணி (பவித்ரா-தீபிகா) வெற்றி பெற்றது.

முன்னாள் டி.ஜி.பி. எம்.ரவி, வேலம்மாள் கல்வி அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி எம்.வி.எம்.வேல்முருகன், தமிழ்நாடு கைப்பந்து சங்க ஆயுட்கால தலைவர் ஆர்.அர்ஜூன் துரை ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பை மற்றும் ரொக்கப்பரிசு வழங்கினார்கள். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர், அரேபியன் கார்டன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் கே.அப்துல் நபீல், மாநகராட்சி மண்டல சேர்மன் மதியழகன், செங்கல்பட்டு மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் எம். அழகேசன் செயலாளர் மகேந்திரன், சேலம் மாவட்ட கைப்பந்து சங்க செயலாளர் சண்முகவேல் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News