பேக்கிங் உணவுகளால் உடல் பருமன், நோய் பாதிப்பு ஏற்படும்- டாக்டர்கள் எச்சரிக்கை
- நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
- இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பேக்கிங் செய்யப்பட்ட தின்பண்டங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருகின்றன. கிராமங்களை விட அதிகளவில் நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு எளிதாக கிடைக்கிறது.
இந்தியாவில் நகர் புறங்களில் வாழக்கூடியவர்கள் இனிப்புகள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை அதிகம் உட்கொள்கிறார்கள்.
சராசரியாக, ஒரு சாதாரண நகர்ப்புற இந்தியர் குறைந்தபட்சம் 100 கிராம் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவை உட்கொள்கிறார், இது ஒரு நாளைக்கு 500 கிலோ கலோரிகளை வழங்குகிறது.
இது தேவையானதை விட அதிகம் என்று ஐதராபாத்தை தளமாகக் கொண்ட தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிக ஆற்றல் கொண்ட உணவு மற்றும் உடல் செயல்பாடு இல்லாததன் விளைவாக, நகரங்களில் உள்ள மக்கள் அதிக எடை மற்றும் பருமனாக உள்ளனர்.
"நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்களிடையே அதிக எடை மற்றும் உடல் பருமன் ஏற்படுவதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது.
இது சமீபத்திய தரவுகளில் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. ஒரு நாளைக்கு 50 கிலோகலோரி என்பது ஒரு மாதத்தில் எடை 1 கிலோ வரை அதிகரிக்க்கும்.
"பதப்படுத்தப்பட்ட உணவுகளின் அதி சுவையான தன்மை, அதிகமாக உட்கொள்வதை எளிதாக்குகிறது. இது ஆல்கஹால் அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய், நீரழிவு மற்றும் இருதய நோய்கள் போன்ற உணவு தொடர்பான தொற்று அல்லாத நோய்கள் அதிகரிக்கும்.
உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் இந்தியர்களிடையே இளம் வயதிலேயே வெளிப்படுகின்றன, இறப்பு விகிதம் உலக சராசரியை விட அதிகமாக உள்ளது.
இது போன்ற உணவு வகைகளை தவிர்த்து சத்தான உணவுகளை உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதன் மூலம் இந்திய நகர்புற மக்களை நோய்வாய் படுதலில் இருந்து பாதுகாக்க முடியும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.