வணிகர்களின் வரி நிலுவை தொகை தள்ளுபடி: முதலமைச்சருக்கு வணிகர் சங்க பேரவை பாராட்டு
- ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
- வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும்.
சென்னை:
தென் சென்னை கிழக்கு மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் கிருஷ்ணகுமார் விடுத்துள்ள அறிக்கையில், அரசின் சமாதான திட்டத்தின்படி வணிகர்களுக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலான வரி நிலுவைத் தொகையை வட்டியுடன் தள்ளுபடி செய்து அவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றிய முதலமைச்சருக்கும் , இதற்கு உறுதுணையாக இருந்து எங்களை வழிநடத்தி செல்லும் தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை மாநிலத் தலைவர் வெள்ளையன் மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோருக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு, குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் தற்போது மின்சார கட்ட ணமும், சொத்து வரியும் கூடுதலாக இருப்பதால் சிறு குறு வணிகர்கள் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வருமானமும் பின்தங்கிய நிலையில் உள்ளது. எனவே, வணிகர்களின் வாழ்வாதரத்தை காப்பாற்ற மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.