தமிழ்நாடு

காவல் துறையில் கூறப்படும் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு அதிகாரம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

Published On 2022-11-24 17:25 GMT   |   Update On 2022-11-24 17:25 GMT
  • விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம்

சென்னை:

தமிழக காவல் துறையில் கூறப்படும் புகார்கள் தொடர்பாக இனி சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் அதிகாரிகள் மட்டத்தில் பணிபுரிபவர்கள் மீது அவ்வப்போது புகார்கள் எழுவதுண்டு.

இதுபோன்ற புகார்களை கீழ்மட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசார், காவலர் கள் உள்ளிட்டோர் அளிப்ப துண்டு. சில நேரங்களில் இந்த புகார் மனுக்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விடுவதும் உண்டு. இதனை கருத்தில் கொண்டு காவல்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

புகார்கள் தொடர்பான விசாரணையை 6 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகளையும் டி.ஜி.பி. அனுமதி பெற்று விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் இனி காவல் துறையில் எழும் துறை ரீதியான புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசாரே விசாரணை நடத்துவார்கள். இதனால் புகார் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News