தமிழ்நாடு (Tamil Nadu)

TANGEDCO-ஐ இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல்

Published On 2024-07-12 15:03 GMT   |   Update On 2024-07-12 15:03 GMT
  • தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது.
  • மின் உற்பத்தியில் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எனப்படும் டான்ஜெட்கோ-ஐ (TANGEDCO) இரண்டாக பிரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாக பிரிக்கப்படுகிறது.

தமிழ்நாடு மின்னுற்பத்தி கழகம், நிலக்கரி, டீசல், அணு அல்லது வேறு ஏதேனும் ஒத்த எரிபொருட்களை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம், காற்று, சூரிய ஒளி, உயிரி எரிபொருள், கடல் அலைகள் உள்பட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்வதை மேற்கொள்ளும் என கூறப்படுகிறது.

நிர்வாக ரீதியாக டான்ஜெட்கோ பிரிக்கப்படும் நிலையில் மின்வினியோகம், மின் உற்பத்தியில் எவ்வித இடர்பாடும் இருக்கக்கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News