தமிழ்நாடு

சென்னை-நெல்லை வந்தே பாரத் ரெயில்: 30-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது

Published On 2023-09-24 04:01 GMT   |   Update On 2023-09-24 04:02 GMT
  • இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
  • சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படவுள்ள வந்தே பாரத் ரெயிலின் பயணச் சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கியது.

சென்னை:

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் தொடக்க விழாவையொட்டி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் ரெயில் கோவில்பட்டி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூா், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய நிறுத்தங்களில் நிறுத்தப்படும். தொடா்ந்து இரவு 10.25 மணிக்கு சென்னை எழும்பூா் வந்தடையும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப் படவுள்ள வந்தே பாரத் ரெயிலின் பயணிகள் சேவை நாளை (திங்கட் கிழமை) முதல் தொடங்க உள்ள நிலையில் பயணச் சீட்டு முன்பதிவு நேற்று தொடங்கியது.

வருகிற 30-ந்தேதி வரை அனைத்து இருக்கை வசதி (ஏ.சி. சோ் காா்), சொகுசு பெட்டிக்கான (எக்ஸி கியூட்டிவ் சோ் காா்) இருக்கைகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. இதுபோல் வரும் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு அதற்கு இரு நாள்களுக்கு முன்னா் இயக்கப்படும் ரெயிலிலும் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.

திருநெல்வேலியில் இருந்து சென்னை வரும் வந்தே பாரத் ரெயிலின் இருக்கைகள் இதுவரை குறைந்த அளவிலேயே முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News