சென்னை: ஜெயின் கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்றக் கோரிய வழக்கு வாபஸ்
- சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த வேண்டும்
- இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக மனுதாரர் தெரிவித்தார்
சென்னை சூளை பகுதியில் உள்ள ஜெயின் கோவில் அருகே நடத்தப்படும் இறைச்சிக் கடையை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆகியவற்றிற்கு உத்தரவிடக் கோரி, கோவிலை நிர்வகிக்கும் ஸ்ரீ அகில பாரதிய சுத் ஹர்ம் ஜெயின் சன்ஸ்க்ருதி ரக்ஷக் அறக்கட்டளை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "கோவில் அருகில் இறைச்சிக் கடை அமைக்கக் கூடாது என எந்த சட்டமோ, விதிகளோ இல்லாதபோது நீதிமன்றம் எப்படி உத்தரவிடமுடியும் என கேள்வி எழுப்பினர்.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளை அணுகுவதாக கூறிய, மனுதாரர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவுக்கு இறைச்சி கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.