தமிழ்நாடு
உயர்கல்வித்துறை சார்பில் 202 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்
- சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
- உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை:
உயர் கல்வித்துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 202 கோடியே 7லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், அரசு பல்வகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை, புதிய கட்டிடங்கள், விடுதிகள் உள்ளிட்டவற்றை திறந்து வைத்தார்.
திருவள்ளூர், திருவாரூர், நாகப்பட்டினம், கோவை ஆகிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசினர் கலை கல்லூரிகள் புதிய கட்டிடங்களை முதலமைச்சர் காணொலி காட்சி வழியாக திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.