மஞ்சள்நீர் கால்வாயில் குப்பைகளை கொட்ட வேண்டாம்- பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
- அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வைகுண்ட பெருமாள் கோவில் குளம், உலக அளந்தார் கோவில் குளத்திற்கு வரும் மழைநீர் வரத்து கால்வாய்களை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
பின்னர் அருந்ததியர் பாளையம் பகுதியில் தேங்கிய மழைநீர் கால்வாய்க்கு மோட்டார் பம்பு மூலம் எடுத்து செல்வதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மஞ்சள் நீர்கால் வாயை பார்வையிட்டு அதன் பகுதிகளில் உள்ள மக்களிடம் குப்பைகளை வடிநீர் கால்வாயிகளில் போட வேண்டாம் என்று பொதுமக்களை கலெக்டர் கலைச்செல்வி கேட்டுக் கொண்டார். இதையடுத்து ரூ.2.5 லட்சம் மதிப்பீட்டில் திருப்பருத்தி குன்றம் இரட்டை கால்வாய் தூர்வாரும் பணி, காஞ்சிபுரம் ஒன்றியம் தாமல் ஏரியில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டில் கரை பலப்படுத்தும் பணி, மதகு கட்டும் பணியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், வருவாய் கோட்டாட்சியர் ரம்யா, மாநகராட்சி பொறியாளர் கணேசன், நீர்வளத்துறை உதவி செயற் பொறியாளர் நீல்முடியான், உதவி பொறியாளர் மார்கண்டேயன் உடன் இருந்தனர்.