பெரம்பலூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
- பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
- நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது.
பெரம்பலூர்:
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி டெல்டா மாவட்டங்களில் நேற்று விடிய விடிய கனமழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பவில்லை. சில நீர்நிலைகளுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட வரவில்லை. இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மழை பெய்யும் என்று எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. விடிய விடிய மழை விட்டு விட்டு பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.