தேர்தல் பத்திரம் மூலம் திமுக, அதிமுகவுக்கு நன்கொடை வழங்கிய சி.எஸ்.கே அணி நிர்வாகம்
- தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
- அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார்.
தேர்தல் பத்திரங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.
அதில், அதிமுக தேர்தல் பத்திரம் மூல ரூ.6.05 கோடி நன்கொடை வாங்கியுள்ளது. அதில், 4 கோடி ரூபாயை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் கொடுத்துள்ளது.
அதிமுகவில் அப்போதைய பொருளாளரான ஓபிஎஸ் தேர்தல் பத்திர நிதி விவரங்களை ஆணையத்திடம் வழங்கியுள்ளார். அதில், அதிமுக ஆட்சி நடைபெற்ற 2019- ம் ஆண்டு சிஎஸ்கே அணி நிர்வாகம் நிதி அளித்தது தெரிய வந்துள்ளது.
திமுக கட்சி தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ரூ.656.5 கோடி நன்கொடை பெற்றுள்ளது. இதில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தரப்பில் திமுகவுக்கு ரூ.14 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.