தமிழ்நாடு

மாஸ்டர் மாதன் உயிரிழப்பு: தமிழக பாஜகவுக்கு பேரிழப்பாகும்- அண்ணாமலை

Published On 2024-07-27 08:30 GMT   |   Update On 2024-07-27 08:44 GMT
  • மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
  • முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் 98 மற்றும் 99-ம் ஆண்டுகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று 2 முறை எம்பியாக பதவி வகித்த மாஸ்டர் மாதன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றி இரவு உயிரிழந்தார். மாஸ்டர் மாதன் மறைவு செய்தியை அறிந்த கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மாஸ்டர் மாதன் மறைவையடுத்து பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை தனது இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில்,

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய மாஸ்டர் மாதன்

நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் பாஜக சார்பில் ஐந்து முறை போட்டியிட்டு, இரண்டு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கட்சி வளர்ச்சிக்கும். நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். நீலகிரி தேயிலைத் தோட்டப் பிரச்சினைகளுக்கும், மலைப்பகுதிகளில், மனித விலங்கு மோதல் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டவர். கடின உழைப்பாளர். இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். மாண்புமிகு முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் வாஜ்பாயின் பேரன்பைப் பெற்றிருந்தவர். அவரது மறைவு, தமிழக பாஜகவுக்குப் பேரிழப்பாகும்.

இன்று, பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், ஐயா மாஸ்டர் மாதன் அவர்கள் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தவுள்ளோம். நாளைய தினம், தமிழகம் முழுவதும், தமிழக பாஜக மாவட்ட அலுவலகங்களில், மாஸ்டர் மாதன் அவர்களது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தப்படும்.

மாஸ்டர் மாதன் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும். நண்பர்களுக்கும். ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

Tags:    

Similar News