தமிழ்நாடு
கள்ளச்சாராயம் விவகாரம்- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
- அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
- மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விவகாரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் பிரவீவன், சேகர், மணிகண்டன், சுரேஷ் மற்றும் தனக்கோடி என்ற மூதாட்டி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, சம்பவ இடத்திற்கு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் விரைந்துள்ளனர்.
மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்டு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.
பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.