தமிழ்நாடு

தி.மு.க.வில் புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகள் வினியோகம்: 7-ந்தேதி முதல் வழங்கப்படுகிறது

Published On 2023-10-29 08:00 GMT   |   Update On 2023-10-29 08:00 GMT
  • 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.
  • உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

சென்னை:

தி.மு.க.வில் 1 கோடியே 10 லட்சத்திற்கு மேல் உறுப்பினர்கள் இருந்த நிலையில் மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் பணி கடந்த ஏப்ரல் 3-ந்தேதி தொடங்கி ஜூன் 3-ந்தேதி வரை நடைபெற்றது.

இதில் மேலும் 1 கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர். இதற்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் மாவட்டம் வாரியாக வழங்கி இருந்தனர்.

இவ்வாறு தலைமைக் கழகத்திற்கு வரப்பெற்ற படிவங்கள் முறைப்படி பரிசீலனை செய்யப்பட்டு புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை தலைமைக் கழகம் தயாரித்துள்ளது.

இதில் 1 முதல் 1000 வரை எண் கொண்ட ரசீதுகள் வைத்திருக்கும் நிர்வாகிகள், தங்களிடம் உள்ள உறுப்பினர் சேர்த்தல் பட்டியலையும், ஒரிஜினல் ரசீதையும் நவம்பர் 7-ந்தேதி முதல் 10-ந்தேதிக்குள் அறிவாலயம் வந்து பட்டியலை சரிபார்த்து உரிமைச் சீட்டுகளை பெற்றுச் செல்ல வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

புதிய உறுப்பினர் உரிமை சீட்டுகளை தலைமைக்கழகத்தில் பெற்றுக் கொள்பவர்கள் அதை உரியவரிடம் ஒப்படைத்து அத்தாட்சி கடிதம் பெற்று அதை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News