தமிழ்நாடு (Tamil Nadu)

திமுக ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கியது

Published On 2024-08-26 12:11 GMT   |   Update On 2024-08-26 12:11 GMT
  • திமுக ஒருங்கிணைப்பு குழு திமுக சார்பு அணிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.
  • சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தொடங்கியது.

கூட்டத்தில் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்களான அமைச்சர்கள் உதயநிதி, கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி அமைக்கப்பட்ட திமுக ஒருங்கிணைப்பு குழு திமுக சார்பு அணிகளுடன் ஆலோசனை நடத்துகிறது.

அதன்படி, திமுக ஆதிதிராவிடர் நல குழு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணிகளுடன் ஒருங்கிணைபஅபு குழு ஆலோசனை நடத்துகிறது.

மேலும், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.

முன்னதாக, வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக திமுகவில் ஒருங்கிணைப்பு குழு அமைத்து திமுக தலைவர் மு.க.ஸ்டலான் அறிவித்தார்.

இந்தக் குழுவில் அமைச்சர்கள் நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்தக் குழு திமுகவில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள், அமைப்பு ரீதியிலான சீரமைப்புகளை தலைமைக்கு தெரிவிக்கும் என அப்போது குறிப்பிடப்பட்டது.

Tags:    

Similar News