தமிழ்நாடு
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்து குவிப்பு வழக்குப்பதிவு
- ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் அ.தி.மு.க. ஆட்சியின்போது நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார்.
- குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், ஓ.பி.எஸ். ஆதரவாளருமான வைத்திலிங்கம் அ.தி.மு.க. ஆட்சியின்போது நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தபோது குடியிருப்பு கட்டுமான அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வைத்திலிங்கம் மீது புதிய வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள வருமானத்துக்கு அதிகமாக 1058 சதவீதம் அளவுக்கு சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.