தமிழ்நாடு
கொசஸ்தலை ஆற்றில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு- எண்ணூர் மீனவர்கள் படகில் சென்று முற்றுகை போராட்டம்
- 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
- மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என்றும் குற்றம்சாட்டினர்.
பொன்னேரி:
எண்ணூர் பகுதியை சேர்ந்த காட்டுக்குப்பம், சின்ன குப்பம் பெரியகுப்பம், முகத்துவாரகுப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம் எண்ணூர் குப்பம், சிவன் படை வீதி குப்பம் உள்ளிட்ட 8 மீனவ கிராம மக்கள் கொசஸ்தலை ஆற்றில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கப் பணிக்கு கொசஸ்தலை ஆற்றில் உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 8 மீனவ கிராம மக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்ட படகுகளில் கொசஸ்தலை ஆற்றில் சென்று மின்கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து முற்றுகையிட்டனர்.
மீன்பீடி தொழில் பாதிக்கப்படுவதாகவும் மீன் இனப்பெருக்க வளம் பாதிக்கும் என்று குற்றம்சாட்டினர். அவர்களிடம் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.