தமிழ்நாடு (Tamil Nadu)

வாகனங்களுக்கான பேன்சி எண் கட்டணம் இரு மடங்கு உயர்கிறது

Published On 2022-10-17 08:33 GMT   |   Update On 2022-10-17 08:33 GMT
  • பேன்சி எண்களை ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பெற முடியாது.
  • முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும்.

சென்னை:

சமீப காலமாக வாகனங்களுக்கான பேன்சி எண் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பிற வி.ஐ.பி.க்கள், நியூமராலஜி காரணங்களுக்காகவோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ தங்களது வாகனங்களுக்கு பேன்சி எண்களை வாங்குகிறார்கள்.

இதற்காக ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரை செலுத்துகின்றனர். தமிழக அரசு 0001 முதல் 9999 வரையிலான 100 வாகன எண்களை சிறப்பு எண்களாக ஒதுக்கி உள்ளது.

இந்த பேன்சி எண்களை ஆர்.டி.ஓ.க்கள் மூலம் பெற முடியாது. ஆனால் ரூ.80 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை சிறப்புக் கட்டணமாக செலுத்தி பெறலாம்.

இந்நிலையில் டி.என். மோட்டார் வாகன விதிகள் 1989-ன் வரைவு திருத்தத்தின்படி பேன்சி எண் கட்டணத்தை ரூ.2 ஆயிரம் முதல் ரூ.8 லட்சம் வரை உயர்த்த உள்துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

இதனால் விரைவில் பேன்சி எண்களுக்கான கட்டணம் இரு மடங்கு உயரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான அரசாணை விரைவில் வெளியாக உள்ளது.

இதன்படி முதல் 4 தொடர்களுக்கு பேன்சி நம்பராக பெற விரும்புபவர்கள் இதுவரை ரூ.40 ஆயிரம் செலுத்தி இருந்தால் இனி மேல் ரூ.80 ஆயிரம் செலுத்த வேண்டியதிருக்கும்.

5 முதல் 8 வரையிலான தொடர்களுக்கு கட்டணம் ரூ.60 ஆயிரத்தில் இருந்து ரூ.1.2 லட்சம் ஆகவும், 9 முதல் 10 வரை எண்களுக்கு கட்டணம் ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாகவும் உயர்கிறது.

11 முதல் 12 வரையிலான தொடர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகிறது.

Tags:    

Similar News