தமிழ்நாடு

சவுக்கு சங்கரை தொடர்ந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

Published On 2024-05-11 04:32 GMT   |   Update On 2024-05-11 04:32 GMT
  • காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது.

காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரெட்பிக்ஸ் யூட்யூப் சேனல் எடிட்டரான ஃபெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். டெல்லியில் இருந்த அவரை போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது

பிரபல யூட்யூபரான சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள் பெண் காவலர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்திருந்தனர்.

காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி குமரேஷ் பாபு கடும் கண்டனங்களை தெரிவித்தார். மேலும் யூட்யூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான தகுந்த நேரம் இது. நேர்காணல் தர வருபவர்கள் அவதூறான கருத்துக்களை கூற தூண்டும் விதமாக நேர்காணல் எடுப்பவர்களை முதல் எதிரியாக சேர்க்க வேண்டும் என கூறியிருந்தார்.

Tags:    

Similar News