மக்களவை தேர்தல்- வேட்பு மனு தாக்கலின்போது 5 பேருக்கு மட்டுமே அனுமதி
- வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும்.
- வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுகிறது.
தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.
தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் சேர்த்து 5 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள்ளார்.
அதன்படி, வேட்பு மனுக்களானது காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே பெறப்படும்.
மனுத்தாக்கலின் போது, தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் இருந்து 100 மீ-க்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மனுத்தாக்கல் நடைபெறும் நாட்களில் மாலை 3 மணிக்கு மேல் தேர்தல் நடத்தும் அலுவலக வளாகத்தில் ஒருவருக்கும் அனுமதியில்லை.