விமான சாகச நிகழ்ச்சி- துணை முதலமைச்சர் உதயநிதி வாழ்த்து
- சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
- விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்திய விமானப்படையின் 92-ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் இன்று விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 72 விமானங்களில் வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தி காட்டினார்கள். காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சாகச நிகழ்ச்சியை காண மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.
விமானப்படையின் வண்ணமயமான சாகச நிகழ்ச்சிகளை பொது மக்கள் கண்டு களித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன்
சென்னை மெரினாவின் பிரகாசமான நீல வானத்தில் இந்திய விமானப்படையின் கண்கவர் வானூர்திக் காட்சியை அனுபவிக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
மூச்சடைக்கக் கூடிய வான்வழி காட்சிகளும், துல்லியமான பறப்பும் எங்களை வியப்பில் ஆழ்த்தியது. இவ்வளவு திறமையையும் அருகில் இருந்து பார்ப்பது ஆச்சரியமாக இருந்தது.
வானத்தில் விமானம் உயரும் போது அனைவரும் ஆரவாரத்துடன் கூடிய சூழல் பிரம்மிப்பாக இருந்தது.
இந்நிகழ்வை மறக்க முடியாததாக மாற்றியமைத்த அனைத்து ஏற்பாட்டாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.