தமிழ்நாடு

வரத்து குறைந்ததால் இஞ்சி கிலோ ரூ.240-க்கு விற்பனை

Published On 2023-05-16 06:29 GMT   |   Update On 2023-05-16 06:29 GMT
  • வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
  • வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிக அளவு இஞ்சி விற்பனைக்கு வருகிறது. வரத்து குறைவு காரணமாக இஞ்சி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் இஞ்சி வரத்து மேலும் குறைந்ததால் அதன் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ இஞ்சி மொத்த விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ இஞ்சி ரூ.240 வரை விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து இஞ்சி வியாபாரி ஒருவர் கூறும்போது, "கடந்த 2 ஆண்டுகளாக இஞ்சிக்கு போதிய விலை கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் இஞ்சி சாகுபடியை நிறுத்திவிட்டனர். இதனால்தான் இஞ்சி வரத்து குறைந்தது. இந்த விலை உயர்வு மேலும் சில நாள்கள் வரை நீடிக்கும்" என்றார். இதேபோல் வரத்து குறைவால் பீன்ஸ் விலையும் தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. மொத்த விற்பனையில் கிலோ பீன்ஸ் ரூ.90-க்கு விற்பனை ஆனது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News