தமிழ்நாடு
திருவண்ணாமலையில் கோடை வெயில் கொடுமையை தவிர்க்க பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும்- ஜி.கே.மணி
- பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
- முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூட்ட எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன் அடிப்படையில் நாளை சித்ரா பவுர்ணமி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் 4.16 மணி முதல் அடுத்த நாள் 24-ந்தேதி அதிகாலை 5.47 மணி உள்ளதால் கூட்டம் அலை மோதும்.
தற்போது கடுமையான வறட்சியும், சுட்டெரிக்கும் வெயில் நிலவுவதால் கோவில் நிர்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும், காவல் துறையும் முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.