தமிழ்நாடு

பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Published On 2024-05-21 10:00 GMT   |   Update On 2024-05-21 10:00 GMT
  • நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.
  • தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

டெல்டா மாவட்டங்களில் திருவாரூர், நாகை மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் அப்பகுதியில் சாகுபடி செய்த பருத்தி செடி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி செய்கின்றனர். இதில் தற்போது சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே தமிழக அரசு மழையால் பாதிக்கப்பட்டு உள்ள பருத்தி செடிகளை முறையாக, முழுமையாக கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் உரிய நஷ்ட ஈடு கிடைக்கும் வகையில் நிவாரணத்தை அறிவிக்க வேண்டும்.

டெல்டா மாவட்டப் பகுதிகளில் மழையால் வீணாகியுள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடிக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News