தமிழ்நாடு (Tamil Nadu)

2 நாட்களாக அதிகரித்த தங்கம் விலை- இன்று சரிவை சந்தித்தது

Published On 2023-02-03 05:26 GMT   |   Update On 2023-02-03 07:11 GMT
  • தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.
  • தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

சென்னை:

பங்குச்சந்தைகளின் நிலவரத்திற்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு தங்கம் ஒரு பவுன் ரூ.40 ஆயிரத்தை கடந்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை உயர ஆரம்பித்தது. ஒரு பவுன் ரூ.41 ஆயிரத்தை எட்டியது. தொடர்ந்து ரூ.42 ஆயிரம், ரூ.43 ஆயிரம் என புதிய உச்சத்தை தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி மீதான வரி உயர்த்தப்பட்டது. இதனால் 1-ந்தேதி அன்று தங்கத்தின் விலை மேலும் அதிகரித்தது.

பட்ஜெட்டின் தங்கத்தால் கிராமிற்கு ரூ.77 அதிகரித்தது. ஒரு பவுனுக்கு ரூ.616 உயர்ந்து ரூ.43,320-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மேலும் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்தது. தங்கம் ஒரு கிராம் ரூ.5,505 ஆக அதிகரித்து பவுன் ரூ.44,040-ஐ தாண்டியது. நேற்று ஒரேநாளில் கிராமிற்கு ரூ.90 அதிகரித்தது. பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.40 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது.

கடந்த 3 நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது. தங்கம் கிராமிற்கு இன்று ரூ.65 குறைந்து பவுனுக்கு ரூ.520 அதிரடியாக குறைந்தது. நேற்று கிராமிற்கு ரூ.90 உயர்ந்து பவுனுக்கு ரூ.728 அதிகரித்த நிலையில் இன்று கிராமிற்கு ரூ.65 வீதம் பவுனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.

இன்று ஒரு பவுன் ரூ.43,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய நிலவரப்படி கடந்த 10 நாளில் பவுனுக்கு ரூ.760 கூடியுள்ளது. ஒரே மாதத்தில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ.3 ஆயிரம் அதிகரித்துள்ளது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News