தமிழ்நாடு (Tamil Nadu)
தங்கம் விலை பவுனுக்கு ரூ.56 குறைந்தது
- தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.
- வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்தது. கடந்த 9-ந்தேதி பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டியது. அதன்பிறகு நேற்று சற்று குறைந்து ரூ.41,896-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.41840-க்கு விற்கப்படுகிறது.
நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5237-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.7 குறைந்து ரூ.5230-க்கு விற்கப்படுகிறது.
அதே நேரத்தில் வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.73.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.74-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.74000-க்கு விற்கப்படுகிறது.