தமிழ்நாடு

பத்திரமாக தரையிறக்கிய விமானி மற்றும் குழுவினருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு

Published On 2024-10-11 21:16 GMT   |   Update On 2024-10-11 21:16 GMT
  • திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
  • கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்தது.

சென்னை:

திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிலையில், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பாராட்டு தெரிவித்தார்.

இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், திருச்சியில் இருந்து ஷார்ஜாவிற்கு புறப்பட்ட விமானத்தின் தரையிறங்கும் கியர் கோளாறுக்கு பிறகு அதை பாதுகாப்பாக தரையிறக்கியதற்காக அதன் விமானி மற்றும் துணை விமானிக்கு நன்றி. இந்த முயற்சி மற்றும் பதற்றமான தருணத்தில் காக்பிட் மற்றும் கேபின் குழுவினரின் துணிச்சல் மற்றும் அமைதியான தொழில்முறை செயல்பாடு உண்மையிலேயே சிறப்புமிக்கது. விமானத்தில் உள்ள அனைவரின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திய அவசர சேவைகளில் ஈடுபட்டோர் உள்பட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது இதயபூர்வ பாராட்டுக்கள். பயணிகள் அனைவரும் இனிதான பயணத்தைத் தொடர வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News