தமிழ்நாடு
அரசு கலைக்கல்லூரி மாணவர்களுக்கு சனிக்கிழமையில் வகுப்பு- பாடத்திட்டத்தை முடிக்க நடவடிக்கை
- அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர்.
- மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது.
சென்னை:
அரசு கலைக்கல்லூரிகளில் தமிழகம் முழுவதும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட முதலாம் ஆண்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தாமதமாக தொடங்கின.
இதனால் பாடத்திட்டங்களை பருவத்தேர்வுக்கு முன்னதாக முடிப்பதில் சிரமம் உள்ளது.
மே மாதத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வு தொடங்குகிறது. அதற்குள் பாடப்பகுதியை முடிக்க அனைத்து கலைக்கல்லூரிகளுக்கும் கல்லூரி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
மே 1-ந் தேதிக்குள் பாடத்திட்டத்தை முடிக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. அதனால் அனைத்து அரசு, உதவி பெறும் கலைக்கல்லூரிகளில் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்தி பாடப் பகுதிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.