தமிழ்நாடு

புறநகரில் மழை: பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2024-10-16 03:25 GMT   |   Update On 2024-10-16 03:25 GMT
  • குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.
  • வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

சென்னை புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் மழை வெளுத்து வாங்கியது. சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை, செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது.

இதனால் பூண்டி, செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட நீரில் 410 கன அடியுடன், வரத்து கால்வாய் மூலம் 240 கன அடி மழை நீர் உட்பட 650 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதில் குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்காக 277 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், சோழவரம் ஏரிக்கு வரும் 160 கன அடிநீரில் 21 கன அடி நீரும், புழல் ஏரிக்கு வரும் 277 கன அடியில் 219 கன அடியும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகைக்கு 60 கன அடியில் 25 கன அடியும், செம்பரம்பாக்கத்திற்கு வரும் 260 கன அடியில் 134 கன அடியும், வீராணம் ஏரிக்கு வரும் 1,423 கன அடியில் 502 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

செம்பரம்பாக்கத்தை பொறுத்தவரையில் நேற்று மாலை 1380 கன அடி நீர் வர தொடங்கியது. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்தை நீர்வளத்துறை அதிகாரிகள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News