தமிழ்நாடு

அமலாக்கத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும்- கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

Published On 2023-12-02 07:51 GMT   |   Update On 2023-12-02 07:51 GMT
  • அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.
  • அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக அரசு டாக்டரை வழக்கிலிருந்து விடுவிக்க ரூபாய் 3 கோடி பேரம் பேசி ரூபாய் 20 லட்சம் லஞ்சப் பணம் பெற்று காரில் தப்ப முயன்ற மத்திய அரசின் அமலாக்கத்துறை அதிகாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் 25 கி.மீ. தூரம் விரட்டி சென்று பலவந்தமாக மடக்கி கைது செய்த செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊழலை ஒழிக்க வந்த புனிதர்கள் போல் வேடம் தரித்து வந்த நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் பெற்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அமலாக்கத்துறை தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை.

அமலாக்கத்துறையோடு நெருங்கிய உறவு வைத்திருக்கிற அண்ணாமலை அதற்கான ஆதாரங்களை பெற்று குற்றச்சாட்டுகளை கூற தயாராக இருக்கிறாரா? அப்படி தயாராக இல்லையெனில் தான் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என கூறுவதோடு, பொது மன்னிப்பை அவர் கேட்க வேண்டும். இல்லையெனில் அவரது குற்றச்சாட்டுக்கு அடிப்படை ஆதாரமற்ற அவதூறான கருத்து தான் என்ற முடிவுக்கு வர வேண்டும். இத்தகைய நடவடிக்கைகளை ஒன்றிய பா.ஜ.க. அரசின் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இனியும் தொடருமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News