தமிழ்நாடு

தமிழகம்-ஆந்திரா-கர்நாடகாவில் 60 இடங்களில் வருமானவரி சோதனை: சென்னை தி.நகரிலும் நடந்தது

Published On 2023-05-02 07:52 GMT   |   Update On 2023-05-02 07:53 GMT
  • பட்டு சேலை கடைகளில் வருமானவரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதியில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.

சாய் சில்க்ஸ் கலாமந்திர் குழுமம் முதன்மையாக கலாமந்திர், மந்திர், காஞ்சீபுரம் வரமகாலட்சுமி சில்க்ஸ் மற்றும் கே.எல்.எம். பேஷன் மால் என்ற பிராண்ட் பெயர்களில் பெண்களுக்கான பிரத்தியேக புடவை விற்பனை செய்து வருகிறது.

குறிப்பாக காஞ்சிபுரம் மூங்கில் மண்டபம் அருகே உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை கடைகளில் வருமான வரி துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தி.நகரிலும் இந்த கடைகளில் சோதனை நடைபெற்றது.

இதன் தலைமையகமான ஐதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த குழுமத்தை பொறுத்தவரை அதிகப்படியான லாபத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த சோதனை 2 அல்லது 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையின் முடிவில் எவ்வளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. எவ்வளவு கோடி ரூபாய் இவர்கள் வரி ஏய்ப்பு செய்திருக்கிறார்கள் என்ற முழு தகவல் செய்தி குறிப்பாக வெளியிடப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News