தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு விபத்து நிவாரண தொகை ரூ.2 லட்சமாக உயர்வு- அரசாணை வெளியீடு

Published On 2023-07-24 06:52 GMT   |   Update On 2023-07-24 06:52 GMT
  • விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை:

மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டு வரும் விபத்து நிவாரணத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி மருத்துவம், கல்வி மற்றும் இதர உதவித் தொகையினை உயர்த்தி வழங்க இரண்டு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விபத்தினால் இறக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் ஒரு லட்ச ரூபாய் நிவாரணத்தொகை, இரண்டு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கை அல்லது கால் இழப்பு, இரு கண்பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ஒரு லட்சத்திலிருந்து இரண்டு லட்சமாக அதிகரித்து வழங்கப்படும்.

மாற்றுத்திறனாளிகள் மகன் மற்றும் மகள் கல்வி பயில வருடாந்திர உதவித் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி பத்தாம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரத்திலிருந்து இரண்டாயிரமாக வழங்கப்படும்.

12-ம் வகுப்பு பயிலும் மகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1500-ல் இருந்து ரூ.2 ஆயிரமாக உயர்த்தியும், விடுதியில் தங்கி பயிலும் மகன் மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.1200-லிருந்து ரூ.2500-ஆக உயர்த்தியும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News