தமிழ்நாடு

சர்வதேச பீடே செஸ் போட்டி- தமிழக வீரர் ஆயுஷ் ரவிக்குமார் சாம்பியன்

Published On 2023-11-23 07:36 GMT   |   Update On 2023-11-23 07:36 GMT
  • அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
  • வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார்.

மவுண்ட் செஸ் அகாடமி சார்பில் சீயோன்-ஆல்வின் கல்வி குழுமம் சார்பில் 2-வது சர்வதேச ஓபன் பீடே ரேட்டிங் செஸ் போட்டி சென்னையில் உள்ள சீயோன் பள்ளியில் நடைபெற்றது. இதில் 534 பேர் பங்கேற்றனர். அமெரிக்கா, கென்யா, கொரியா நாட்டில் இருந்தும் வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டி முடிவில் 6 வீரர்கள் 7 புள்ளிகளுடன் இருந்தனர். டை பிரேக்கர் முறையில் தமிழக வீரர் ஆயுஷ் ரவிக்குமார் சாம்பியன் பட்டம் பெற்றார்.

அவருக்கு ரூ.30 ஆயிரம் பரிசு தொகை கிடைத்தது. கோகுல் கிருஷ்ணா, ராமகிருஷ்ணன், ஹரிகணேஷ், யஷ்வந்த், ஆதித்யா ஆகியோர் 2 முதல் 6-வது இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு சீயோன்-ஆல்வி பள்ளி குழும தலைவர் என்.விஜயன் பரிசுகளை வழங்கினார். மொத்தம் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

Tags:    

Similar News